திருச்சியில் உள்ள பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவர் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆறு மாதத்தில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து சென்ற தமிழ்ச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. ஆகவே கணவர் பாரதிதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி அரியமங்கலம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 18 வயதில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருந்துள்ளார்.
அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனை தொடர்ந்து செல்வராஜ் போலீசில் புகார் கொடுக்க காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.