கணவர் மட்டும் போதும்! சீரியல் நடிகை அனுவின் சிம்பிளான வளைகாப்பு

சின்னத்திரை நடிகை அனு சுலாஷ் தற்போது 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வருகிறார். கடந்த 2017ம் வருடம் தனது காதலர் விக்கியை கரம்பிடித்த அனு சுலாஷ் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதற்காக 'பாண்டவர் இல்லம்' திரைக்கதையிலும் அவர் கர்ப்பமாக இருப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான அனு சுலாஷுக்கு அவரது கணவர் விக்கி மட்டும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து மனம் திறந்துள்ள அனு, 'நானும் எனது கணவரும் வளைகாப்பு நிகழ்வை சிம்பிளாக அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சிறப்பான அந்த ஒரு நாளை முற்றிலும் தனிமையுடன் எங்கள் குழந்தையுடன் மட்டும் ஆனந்தமாக தழுவிக்கொள்ள விரும்பினோம். விக்கி முதன்முதலாக எனக்கு நலங்கு சடங்கு செய்தார். அது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. என்னை புதுமணப்பெண் போல முகம் சிவக்க வைத்தது' என்று கூறியுள்ளார். அனுசுலாஷ் தனது வளைகாப்பு புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.