கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சார்பில் முக்கிய அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கோவை மாவட்ட வருவாய் அலகில் நீதித்துறை நடுவர் பயிற்சிக்கு வட்டாட்சியர்கள் அனுப்பப்பட்டதை தொடர்ந்து காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே நிர்வாக நலன் கருதி தகுதி வாய்ந்த துணை வட்டாட்சியர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. மேலும் வட்டாட்சியர் நிலையில் பணிமாறுதல்களும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
எண்வட்டாட்சியர் பெயர் மற்றும் அலுவலகம்கூடுதல் பொறுப்பு அலுவலகம் மற்றும் பதவி நிலை1சி.ரேணுகாதேவி, தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், மதுக்கரை வட்டம் (பணி மாறுதல்)வருவாய் வட்டாட்சியர், ஆனைமலை வட்டம்2எஸ்.மாரீஸ்வரன், வருவாய் வட்டாட்சியர், ஆனைமலை வட்டம் (பணி மாறுதல்)தனி வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம், கிணத்துக்கடவு3எஸ்.ராஜா, முன்னாள் தனி வட்டாட்சியர், விமான ஓடுதள விரிவாக்கம், கோவை (விடுப்பில் உள்ளவருக்கு பணியிடம் வழங்கி)தனி வட்டாட்சியர், நகர்புற நிலவரி வசூல், கோவை4பி.சரவணகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், அன்னூர் வட்டம் (வட்டாட்சியராக தற்காலிக பதவி வழங்கி)தனி வட்டாட்சியர், நகர நிலவரித் திட்டம், கோவை தெற்கு5பி.டி.கணேஷ் பாபு, தலைமை உதவியாளர், மாவட்ட நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலகம், கோவை (வட்டாட்சியராக தற்காலிக பதவி வழங்கி)தனி வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம், கோவை வடக்கு6ஏ.சத்தியன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மதுக்கரை வட்டம் (வட்டாட்சியராக தற்காலிக பதவி வழங்கி)தனி வட்டாட்சியர், விமான ஓடுதள விரிவாக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை7பி.சிவக்குமார், தனித்துணை வட்டாட்சியர் (தேர்தல்), கிணத்துக்கடவு வட்டம் (வட்டாட்சியராக தற்காலிக பதவி வழங்கி)தனி வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம், மதுக்கரை வட்டம்8பி.ரமேஷ்குமார், தனி துணை வட்டாட்சியர் (தேர்தல்), மதுக்கரை வட்டம் (வட்டாட்சியராக தற்காலிக பதவி வழங்கி)தனி வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம், அன்னூர் வட்டம்9பி.மணிவேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சூலூர் வட்டம் (வட்டாட்சியராக தற்காலிக பதவி வழங்கி)கலால் மேற்பார்வை அலுவலர், கோவை தெற்கு10எஸ்.வாசுதேவன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஆனைமலை வட்டம் (வட்டாட்சியராக தற்காலிக பதவி வழங்கி)தனி வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம்,11ஆர்.சகுந்தலாமணி, தனி வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம், அன்னூர் வட்டம் (பணியிட மாறுதல்)தனி வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம்,12வி.விஜயலட்சுமி, தனி வட்டாட்சியர், விமான ஓடுதள விரிவாக்கம், கோவை (பணியிட மாறுதல்)வட்டாட்சியர், தேர்தல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை
இந்த பதவி உயர்வை தவிர்க்கும் வகையில் விடுப்பில் சென்றாலோ அல்லது பணியில் சேராமல் காலம் தாழ்த்தினாலோ சம்பந்தப்பட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். துணை வட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வட்டாட்சியர் பதவி உயர்வு முற்றிலும் தற்காலிகமானது மட்டுமே.
மேற்குறிப்பிட்ட அனைவரும் பணியில் சேர்ந்த விவரத்தை சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர்களுக்கு அறிக்கை வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.