விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி டிசம்பர் 21ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக என வனத்துறை அறிவித்துள்ளது.
அதேபோல், காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி. இரவில் தங்கவோ, நீரோடைகளில் குளிக்கவோ அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாளில் கனமழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமானால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.