வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தடுப்பூசி வழங்கும் பணி சிறப்பாக உள்ளதால் கொரோனா பரவல் குறித்த அச்சம் தேவை இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொரோனா வைரசுக்கு எதிரான ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை தயாரிக்கும் மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த ‘சீரம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் புனேவாலா கூறியுள்ளதாவது:
![]() |
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் அச்சமடையத் தேவையில்லை. நம் நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு தெரிவிக்கும் நடைமுறைகளை கடைப்பிடித்தாலே, வைரஸ் பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement