தன்னை விட 23 வயது மூத்த நடிகரை மணந்த நடிகை..முன்னாள் கணவருக்கு ஒரு மில்லியன் வழங்க ஒப்புதல்


முன்னாள் கணவர் ஜானி டெப் மீதான அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்வதாக நடிகை ஆம்பர் ஹெர்ட் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வயது மூத்த நடிகருடன் திருமணம்

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், தன்னை விட 23 வயது குறைந்த நடிகை ஆம்பர் ஹெர்ட்டை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது. அதன் பின்னர் பெண்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதிய ஆம்பர் ஹெர்ட், அதில் முன்னாள் கணவர் ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆம்பர் ஹெர்ட்/Amber Heard

@Getty Images

சரிந்த செல்வாக்கு

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஜானி டெப்பின் படவாய்ப்புகள் குறையத் தொடங்கின.

இதனால் ஜானி டெப் முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஜானி டெப்/Johnny Depp

@Reuters/Chinese Stringer Network

மூன்று ஆண்டுகள் சென்ற இந்த வழக்கின் முடிவில் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

அத்துடன் 15 மில்லியன் டொலர்களை இழப்பீடாக ஜானி டெப்புக்கு செலுத்த வேண்டும் என்று ஆம்பர் ஹெர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

ஒரு மில்லியன் டொலர் அளிக்க ஒப்புதல்

இந்த நிலையில், தன்னால் ஒரு மில்லியன் டொலர்கள் தான் வழங்க முடியும் என்று கூறிய ஆம்பர் ஹெர்ட், முன்னாள் கணவர் தொடர்பிலான வழக்குகளை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பை ஜானி டெப் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.