போதைப் பொருட்களின் ரகசிய குறியீடாக மாறும் எமோஜிக்கள்; இங்கிலாந்து போலீஸ் பகீர்.!

கடந்த சில ஆண்டுகளாக, டிஜிட்டல் உலகத் தகவல்தொடர்பில், எமோஜிக்களே நவீனகால ஹைரோகிளிஃப்களாக மாறியுள்ளன. நவீன எமோஜிகள் பயன்பாடு, 1999 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. எமோஜிக்களுக்கு மொழி கிடையாது என்பதுதான் அதன் முக்கிய சிறப்பு.

இந்த எமோஜி வெளிப்படுத்தும் உணர்வை, உலகின் எந்த நாட்டுக்காரரும், எந்த மொழி பேசுபவரும் புரிந்துக் கொள்ள முடியும். சொற்களே இல்லாமல், வெறும் எமோஜிக்கள் மட்டுமே வைத்து எழுதப்படும் கவிதைகள் இன்று ஏராளம்.

ஆனால் போதைப் பொருட்களின் ரகசிய குறியீடாக எமோஜிக்கள் மாறி வருவதாக இங்கிலாந்து காவல்துறையினர் பகீர் கிளப்பியுள்ளனர். டீன் ஏஜ் பருவ குழந்தைகள் போதைப் பொருட்களை பற்றி கூறவும், போதை நிலையை பற்றி சக நண்பர்களுக்கு தெரிவிக்கவும், ஆனால் அதே சமயம் பெற்றோருக்கு புரியாத வகையிலும் சொல்வதற்கு எமோஜிக்களை ரகசிய குறியீடாக பயன்படுத்திவருவதாக போலீசார் கூறுகின்றனர்.

இது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இங்கிலாந்து போலீஸார் சில எமோஜிக்களையும், அதன் உண்மையான அர்த்தங்களையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி கண்கள் எமோஜி போதைப் பொருள் விற்பவரையும், மீன் எமோஜி கொகைனையும் குறிக்கும்.

அதேபோல் ஸ்ட்ராபெர்ரி கஞ்சாவையும், கத்திரிக்காய் செக்ஸையும் குறிக்கும். ராக்கெட் எமோஜி, தான் எவ்வளவு போதையில் இருக்கிறேன் என்பதை தெரிவிக்க பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் கேஸ் பம்ப் அல்லது பனித்துளி எமோஜி கொகைனை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கண்கள் சேர்ந்தது போன்ற எமொஜி அல்லது பவர் கேபிள் எமொஜி என்பது யாரோ போதை பொருள் விற்பனையாளர் என்று குறிக்கிறது. அதேபோல் குதிரை எமோஜி கீட்டமைன் போதைப் பொருளை குறிக்கும்.

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்எல்ஏ பரிசு வழங்கினார்!

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘‘ பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிய வேண்டும் என்பதற்காகவே, இந்த எமோஜிக்களை தற்போது வெளியிட்டுள்ளோம். இங்கு மாறாதது எதுவும் இல்லை என்பதால், இந்த தற்காலிகமாக அறிமுகப்படுத்தியுள்ளோம். தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் இருப்போம்.

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: பிரான்சில் வெடித்த கலவரம்!

மேலும் கடந்த 2 வாரங்களாக பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். மேற்கூறிய எமோஜிக்களை குழந்தைகள் அடிக்கடி உபயோகப்படுத்துவது குறித்து தெரியவந்தால், பெற்றோர்கள் குழந்தைகளுடன் சென்று அன்பாக விவாதிக்க வேண்டும்’’ என்று கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.