போர் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது: ரஷ்ய படைகளிடம் உண்மையை ஒப்புக் கொண்ட புடின்


உக்ரைனின் பல பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாகி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கடினமாகும் நிலைமை

உக்ரைன் மீதான போர் தாக்குதலில் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள் பின்பு, தங்கள் நிலைகளில் இருந்து பின்வாங்கி கொண்டது.

கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய இந்த போர் நடவடிக்கை தற்போது 11வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த போர் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் 15 சதவிகித பகுதியை செப்டம்பரில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கிரெம்ளின் நடத்தப்பட்ட விழாவில் ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வ இணைத்து கொண்டார்.

போர் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது: ரஷ்ய படைகளிடம் உண்மையை ஒப்புக் கொண்ட புடின் | Putin Zelenskyy Wants Weapons Russia Ukraine War(AFP via Getty Images)

இவ்வாறு ரஷ்யாவுடன்  இணைக்கப்பட்ட Donetsk, Luhansk மக்கள் குடியரசுகள், Kherson மற்றும் Zaporizhzia ஆகிய நான்கு பகுதிகளில், கெர்சன் நகரம் மட்டும் உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் மீண்டும் உக்ரைன் வசம் சென்றுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் இயங்கும் ரஷ்ய பாதுகாப்பு படைகளிடம் திங்களன்று உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்,  “ ஆம், இப்போது உக்ரைனில் உங்களுடைய நிலைமை கடினமாக உள்ளது, அதிலும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், மற்றும் சபோரிஜியா ஆகிய நான்கு பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

போர் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது: ரஷ்ய படைகளிடம் உண்மையை ஒப்புக் கொண்ட புடின் | Putin Zelenskyy Wants Weapons Russia Ukraine War(Anadolu Agency via Getty Images)

உக்ரைனில் குவிக்கப்படும் ஆயுதங்கள்

உக்ரைனின் முக்கிய ஆற்றல் இருப்புகள் மீது ரஷ்யாவின் காமிகேஸ் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, கீவ் மேற்கத்திய நாடுகளிடம் அதிக ஆயுதங்களை பெற கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மாலை உரையில் வழங்கிய தகவலில், ஆயுதங்கள், குண்டுகள், புதிய தற்காப்பு திறன்கள் இவை அனைத்தும் போரின் முடிவை விரைவுபடுத்தும் திறனை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். 

போர் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது: ரஷ்ய படைகளிடம் உண்மையை ஒப்புக் கொண்ட புடின் | Putin Zelenskyy Wants Weapons Russia Ukraine War (Anadolu Agency via Getty Images)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.