வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்பூர்: ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணத்தில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்வியா ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திரிபுராவில் பிரதமர் நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை. மத்திய அமைச்சர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை?
ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்துவிட்டது. ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement