ரிக்கி பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

கிரிக்கெட் உலகில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் அவ்வப்போது நடப்பது உண்டு. அந்தப் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் நிச்சயம் இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி 1999, 2003, 2007 என அடுத்தடுத்து ஹாட்ரிக் உலக கோப்பைகளை வென்று அசத்தியது.

இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007ல் அடுத்தடுத்து உலக கோப்பைகளை வென்றது ஆஸ்திரேலியவை பொறுத்தவரை தற்போது வரை தற்போது வரை மிகச்சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் அவர்கள் ரிக்கி பாண்டிங்கை தான் சொல்வார்கள்.

அதேவேளையில் இந்தியாவை பொறுத்தவரை சிறந்த கேப்டன் யார் என்றால் அது சந்தேகத்துக்கு இடமின்றி தோனி தான் என கூறுவர். ஏனெனில் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய அனைத்து உலக கோப்பைகளை வென்றது.

அனைத்து உலக கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி. 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

இவர்கள் இருவரில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்றால் அதை தேர்வு செய்வது சற்று கடினம் தான் இருந்தாலும் ரிக்கி பாண்டிங்கை விட தோனியே மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரிக்கி பாண்டிங் ஒரு அற்புதமான அணியை கொண்டிருந்தார். அதே வேளையில் தோனியும் மிகச்சிறந்த அணியை கொண்டிருந்தார். என்னை பொறுத்தவரை இருவரும் அருமையாக அணியை வழிநடத்தினர். அருமையாக செயல்பாட்டை கொண்டுள்ளனர். இருவரும் அருமையான சாதனைகளை படைத்துள்ளனர். இருவரையும் தனித்தனியே பிரித்து பார்க்க முடியாது.

இந்திய கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் சூழலை அதிகளவில் தோனி கையாண்டவராக இருக்கிறார். அதுதான் பாண்டிங்கை காட்டிலும் தோனி சற்று தலைசிறந்த கேப்டன் என நான் சொல்ல காரணம்.

மற்றொரு விஷயம் என்னவென்றால் பாண்டிங்கின் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் தெளிவாக இருந்தது. அதனால் ஆட்டத்தில் சிலவற்றை மட்டும் கன்ட்ரோல் செய்தால் போதும் என்ற நிலைதான் பாண்டிக்குக்கு இருந்தது.

இருந்தாலும் என்னைபொறுத்தவரை இந்திய கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் சூழலை தோனி அதிகளவில் கையாண்ட விதத்தை வைத்து ரிக்கி பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் என்று சொல்ல காரணம், சாரி ரிக்கி என கூறியுள்ளார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.