Top 10 Tech Fails 2022: மோசமான Tech நிகழ்வுகள் 2022 ஆம் ஆண்டு!

2022 ஆம் ஆண்டு டெக் உலகில் மிகப்பெரிய வளர்ச்சியும் மாற்றமும் கண்டது. பல புதிய டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் மற்றும் வெளியீடுகள் இருந்தன. ஆனால் இந்த வருடம் பல விஷயங்கள் மோசமானதாகவும் மாறின. அப்படி மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு மிகவும் மோசமாக சொதப்பிய சில டெக்னாலஜி அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இதில் டெக்னாலஜி உலகில் சொதப்பிய மனிதர்கள், கண்டுபிடிப்புகள் என பல இடம்பெற்றுள்ளன.

Amazon Alexaதற்போது உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் இந்த் Amazon நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் Alexa கடந்த ஆண்டு அதன் பல வசதிகளை இழந்தது. பல வேலைகள் செய்துவந்த அலேக்சா தற்போது வெறும் பாட்டு போடுவது, வானிலை அறிவிப்பது போன்ற சாதாரண விஷயங்களை மட்டுமே செய்கிறது.இந்த ஆண்டு மட்டும் Amazon நிறுவனத்திற்கு 10 பில்லியன் டாலர் நிதி இழப்பு இந்த Alexa மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் வேலை செய்த பலரை Amazon நிறுவனம் வேலையே விட்டு நீக்கியுள்ளதாக தெரிகிறது.
Gooogle Stadiaஇந்த வருடம் கூகுள் நிறுவனத்தால் கைவிடப்பட்ட இன்னொரு டெக்னாலஜி இந்த Stadia ஆகும். இது ஒரு கேமிங் கன்சோல் ஆகும். இதில் நாம் எங்குவேண்டுமானாலும் சென்று கேம் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் இதன் சேவை மிகவும் சுமாராகவே இருந்ததால் இந்த டெக்னாலஜி கூகுள் நிறுவனம் நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
MetaverseFacebook (தற்போது Meta) நிறுவனத்தின் மிகப்பெரிய தோல்வியாக இந்த metaverse பார்க்கப்படுகிறது. முக்கியமாக அந்த நிறுவன தலைவர் மார்க் சகேர்பேர்கின் இத்தனை ஆண்டுகள் டெக்னாலஜி உலக ஆதிக்கம் இந்த ஒரு திட்டத்தில் சீர்குலைந்தது.அளவிற்கு அதிகமான நம்பிக்கையில் இதில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து இதை அவர் உருவாக்கினார். ஆனால் இது பயனர்களை அவ்வளவாக கவரவில்லை. இதன் காரணமாக Meta நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து பல லட்சம் பேரை வேலையே விட்டு நீக்கியது. இது அவரின் டெக் பயணத்தில் ஒரு பெரும் தோல்வியாக பார்க்கப்படுகிறது.
Iphone 14 Plusஇந்த போன் பார்ப்பதற்கு மிகப்பெரிய போன் போன்ற டிசைன் கொண்டுள்ளது. ஆனால் விலை அம்சத்தில் ஆப்பிள் நிறுவனம் சொதப்பிவிட்டது. அவ்வளவு விலைக்கு போனின் ஸ்க்ரீன் அளவை தவிர வேறு என்ன வசதிகள் இடம்பெறும் என்பதை ஆப்பிள் நிறுவனம் வாடிகையாளர்களுக்கு விளம்பரப்படுத்த தவறிவிட்டது.இதனால் இந்த போன் வாடிக்கையாளர்கள் யாரும் விரும்பாமல் இதற்கான தேவை குறைந்துவிட்டது. இதனால் இந்த ஐபோன் 14 சீரிஸ் போன்களில் இந்த ப்ளஸ் மாடல் சொதப்பலாகவே பார்க்கப்படுகிறது.
Twitter Muskபெரும் அதிரடியாக ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கி பலரை வேலையே விட்டு நீக்கி அதிரடி காட்டினார். மேலும் ட்விட்டர் ப்ளூ பயன்படுத்த இனி மாதம் 8 டாலர் செலுத்தவேண்டும் என்று கூறினார்.பலர் இதனால் ட்விட்டரை விட்டு வெளியேறினர். மேலும் ட்விட்டரில் தான் தலைவராக தொடரவேண்டுமா என்று வாக்கு எண்ணிக்கை நடத்தி அதில் அவருக்கு எதிராக வாக்குகள் வந்ததும் தான் வெளியேறப்போவதில்லை என்றும் வேறு ஒரு முட்டாள் கிடைக்கும் வரை ட்விட்டரில் தொடரப்போவதாக கூறி அனைவரையும் ஏமாற்றினார்.
​FTX ஊழல்உலகில் தற்போது கிரிப்டோ பணம் மிகவும் பிரபலமாக உள்ளது. அப்படி மக்களை கிரிப்டோ பணத்தில் முதலீடு செய்ய கூறி பலரிடம் பணம் பெற்று அதை வேறு ஒரு முதலீட்டில் விட்டு பெரும் ஊழல் செய்துள்ளனர். இதில் முக்கிய புள்ளியாக சிக்கியவர் FTX தலைவர் சாம் பேங்க்மான் ப்ரைட் ஆவார். இப்போது இவர் பல வழக்குகளை சந்தித்து போலீஸ் பிடியில் இருந்துவருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.