Uorfi Javed: பொது இடத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி: பிக்பாஸ் பிரபலம் அதிரடி கைது.!

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஊர்பி ஜாவேத். தற்போது எப்போதும் டிரெண்டிங்கிலே இருக்கும் இவர் சோஷியல் மீடியாவிலும் ஹாட் டாப்பிக்காவே இருக்கிறார். ரசிகர்களின் கவனைத்தை ஈர்க்க பல சர்ச்சையான விஷயங்களை செய்யும் ஊர்பி தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் ஊர்பி. தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்த பின்னர் மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எப்போதும் தான் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய உடைகளில் வித்தியாசம் காட்டி வருகிறார் ஊர்பி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவார் ஊர்பி. சிறு வயதிலிருந்தே வித்தியாசமாக உடை அணிந்துகொள்ளவது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படியான முயற்சிகளை செய்து வருகிறேன் என அவரே ஒருமுறை கூறியதும் உண்டு.

Varisu vs Thunivu: வாரிசுக்கு போட்டியாக அதிரடி காட்டும் துணிவு படக்குழு: பரபரக்கும் இணையம்.!

உர்ஃபியின் வித்தியாசமான ட்ரெஸ்ஸிங் சென்ஸிற்கு பின்னாடி ஒரு குழுவே வேலை செய்வதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் குரல்வளை அழற்சி நோய்க்காக சிகிச்சை எடுக்க துபாய் சென்ற இடத்தில் உர்ஃபி ஜாவேத்தை துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!

கிளாமரான உடைகளுடன் நடமாட தடை உள்ள பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் கூடிய டிரஸ் அணிந்து வீடியோ பதிவு செய்துள்ளார் ஊர்பி. இதுகுறித்த புகார் கிடைத்த உடன் போலீசார் ஊர்பியை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அவரிடம் விசாரணையும் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.