Vanangaan: கழட்டிவிட்ட சூர்யா.. பாலா போடும் பலே திட்டம்: பரபரக்கும் கோலிவுட்.!

நடிகர் சூர்யா, பாலா கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் ‘வணங்கான்’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதனிடையில் ‘வணங்கான் படப்பிடிப்பின் போது சூர்யா, பாலா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இயக்குனர் பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும்..” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jailer Update: ஆட்டத்தை ஆரம்பித்த தலைவர்: வேகமெடுக்கும் ‘ஜெயிலர்’..!

‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா வெளியேற கதை தான் காரணம் என்று பாலா கூறினாலும், வேறு பல காரணங்கள் இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. மேலும் சூர்யா விலகினாலும் ‘வணங்கான்’ படத்தை இயக்குவதில் உறுதியாக உள்ளார் பாலா. அதன்படி லேட்டஸ்ட் தகவலாக சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜய் இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pichaikkaran2: விஜய் ஆண்டனியின் புதிய அவதாரம்: ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் தாறுமாறு அப்டேட்.!

ஏற்கனவே ஹரி, சூர்யா இணையும் ‘அருவா’ படம் டிராப் ஆன போது அருண் விஜய் நடிப்பில் ‘யானை’ படத்தை இயக்கினார் ஹரி. இந்நிலையில் தற்போது மீண்டும் சூர்யா ரிஜக்ட் செய்த கதையில் அருண் விஜய் நடிக்கவுள்ளார். மேலும் சமீபகாலமாக அருண் விஜய் மார்கெட் சரிவை சந்தித்து வருவதால் ‘வணங்கான்’ படம் பாலா, அருண் விஜய் இருவருக்கும் தரமான கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.