Varisu: 2 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி செய்யப்போகும் காரியம்: பரபரக்கும் கோலிவுட்.!

விஜய்யின் ‘வாரிசு’ பட ரிலீசுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனது 66 வது படத்தில் நடிக்க கமிட் ஆனார் விஜய். ‘பீஸ்ட்’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளான ‘ரஞ்சிதமே’ பாடல் அண்மையில் வெளியானது. விவேக் எழுதிய இந்தப்பாடலை விஜய் பாடியிருந்தார். விஜய் தன்னுடைய ஸ்டைலில் செம்ம ஸ்டப் போட்டுள்ளதாக ரசிகர்கள் இந்தப்பாடலை கொண்டாடினர். யூடிப் டிரெண்டிங்கிலும் இந்தப்பாடல் கலக்கி வருகிறது.

அதனை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிளாக ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. தமன் இசையில் சிம்பு இந்தப்பாடலை பாடியிருந்தார். ‘ரஞ்சிதமே’ பாடலை விட இந்தப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்நிலையில், தற்போது ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது பாடல் நேற்றைய தினம் வெளியானது.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!

விவேக் எழுதிய இந்தப்பாடலை மனதை மயக்கும் குரலில் கே.எஸ்.சித்ரா பாடியிருந்தார். அம்மா செண்டிமென்ட்டில் வெளியான இந்தப்பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Uorfi Javed: பொது இடத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி: பிக்பாஸ் பிரபலம் அதிரடி கைது.!

’வாரிசு’ இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 4 மணி முதல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் டயலாக்குடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ’மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.