Varisu vs Thunivu: வாரிசுக்கு போட்டியாக அதிரடி காட்டும் துணிவு படக்குழு: பரபரக்கும் இணையம்.!

வாரிசு, துணிவு படங்களின் போட்டியால் சோஷியல் மீடியாவே பரபரப்பாகி உள்ளது. வரும் பொங்கலுக்கு இந்த இரண்டு படங்களும் வெளியாகவுள்ளது. விஜய், அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாரிசு’. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதே போல் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக ‘துணிவு’ படத்தில் வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைந்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்யும் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிளாக ’சில்லா சில்லா’ பாடல் வெளியானது. அனிருத் குரலில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் வெளியாகி ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் யூடிப்பில் பல மில்லியன் பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர். இதனையடுத்து ‘துணிவு’ படத்தின் இரண்டாவது சிங்கிளாக ‘காசேதான் கடவுளடா’ பாடல் அண்மையில் வெளியானது.

Varisu Update: அடுத்த அதிரடிக்கு தயாராகும் ‘வாரிசு’ படக்குழு: வேறலெவல் சம்பவம்.!

இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது தொடர்பாக ‘துணிவு’ பட இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கேங்ஸ்டா’ என பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப்பாடல் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இணையத்தில் தீயாய் பரவும் இந்த பதிவால் சோஷியல் மீடியாவே பரபரப்பாகியுள்ளது.

Thalapathy Vijay: போடு வெடிய.. 400 கோடி பட்ஜெட்டில் விஜய் போட்டுள்ள மெஹா திட்டம்.!

அதே போல் ‘வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி பாடல் வெளியான நிலையில் நேற்றைய தினம் ‘SoulOfVarisu’ பாடல் வெளியானது. கே.எஸ். சித்ரா பாடிய இந்தப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதே நாளில் துணிவு மூன்றாவது சிங்கிளும் ரிலீஸாகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.