ஆசையா போனேன் அசிங்கப்படுத்திட்டாங்க; மனவருத்தத்தில் ஜி.பி.முத்து

டிக்-டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து இன்று தமிழகத்தின் டாப் சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சராக இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல. வரிசையாக படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்துள்ளனர். ஜி.பி.முத்து இப்போதெல்லாம் மீடியாவில் எதை பேசினாலும் அதிக கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் 'கனெக்ட்' திரைப்படத்தின் செலிபிரேட்டி ஷோவில் தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறியுள்ள விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் இன்று (டிச.,22) வெளியான நிலையில், அண்மையில் அந்த படம் செலிபிரேட்டிகளுக்காக காட்சியிடப்பட்டது. அப்போது ஜி.பி.முத்துவுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதையேற்று அங்கே சென்ற ஜி.பி.முத்துவுக்கு மனவருத்தம் ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜி.பி.முத்து, 'ஈவண்ட் நடத்தியவர்கள் நயன்தாரா தான் என்னுடன் சேர்ந்து படம்பார்க்க விரும்புவதாக அழைத்தனர். ஆனால், அங்கே அழைத்து சென்று எங்கோ ஒரு ஓரத்தில் உட்கார வைத்தனர். மேலும், அங்கே இருந்த பவுன்சர்கள் மிகவும் என்னை சீப்பாக நடத்தினார்கள். தூரப்போன்னு துரத்தினார்கள். எனக்கு அது மிகவும் சங்கடமாக இருந்தது. எனவே தான் வெளியேறிவிட்டேன். அதன்பிறகு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்து பேசினார். நான் ஏற்கனவே பாதிதூரம் கடந்துவிட்டேன் என்பதால் அடுத்தமுறை சந்திப்போம் என வந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.