ஆண் நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் விடிய விடிய சாட்டிங்: பியூட்டிஷியன் கொலையில் திடுக் தகவல்

நாகர்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த அழகியமண்டபம் அருகே தச்சகோடு பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (35). சொந்தமாக டெம்போ ஓட்டி வருகிறார். அவரது காதல் மனைவி ஜெப பிரின்ஷா (33). ஜெப பிரின்ஷா திருவனந்தபுரத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார். இது எபனேசருக்கு பிடிக்கவில்லை. ஆகவே 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு தக்கலை அருகே பரைக்கோடு சானல்கரை ரோட்டில் வைத்து மனைவியை, எபனேசர் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து எபனேசரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே எபனேசர் எழுதிய 11 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், பல உருக்கமான தகவல்களை அவர் எழுதி இருந்தார். ஜெப பிரின்ஷா பியூட்டிஷியன் படிப்புக்காக வீட்டுப் படியை தாண்டியபோது தான் பல பிரச்னைகள் உருவானது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஜெப பிரின்ஷா ஆண் நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி பேசியதற்கான ஆதாரங்கள், வாய்ஸ் கால்கள் ஆகியவற்றை எபனேசர் வெளியிட்டு உள்ளார். அதில் ஆண் நண்பர்களுடன் ஜெப பிரின்ஷா கொஞ்சிப் பேசுதல், செல்லமாக கோபித்தல் போன்று பல்வேறு தகவல்கள் அடங்கி உள்ளன. இவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒரு நண்பர் சற்று எல்லை மீறி ஆபாசமாக போட்டோ எடுத்து அனுப்புமாறு கேட்டு உள்ளார். ஜெப பிரின்ஷாவும் தன்னை ஆபாசமாக படம்பிடித்து அனுப்பி உள்ளார். ஆண் நண்பர்கள் தங்களுடைய போட்டோவையும் ஜெப பிரின்ஷாவுக்கு அனுப்பி உள்ளனர். ஜெப பிரின்ஷா தினந்தோறும் 2 ஆண் நண்பர்களுடனும் வாட்ஸ் அப்பில் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர வாட்ஸ் அப்பில் விடிய விடிய சாட்டிங்கும் செய்து வந்துள்ளார். இதனால் தான் ஆத்திரமடைந்து எபனேசர், ஜெப பிரின்ஷாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

*நம்பிக்கை துரோகம்
இதற்கிடையே எபனேசர் 4 வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், நான் வெளிநாட்டில் இருந்து பணத்தை மனைவி பெயருக்குத்தான் அனுப்புவேன். அவரது பெயரில் 2 இடங்களில் நிலம் வாங்கி உள்ளேன். வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை என் மனைவியின் தந்தை சிறிது சிறிதாக எடுத்து வட்டிக்கு கொடுத்து உள்ளார். என் மனைவி மீதான நம்பிக்கையில் தான், நான் வெளிநாட்டுக்கு சென்றேன்.

அவரை முழுவதுமாக நம்பினேன். ஆனால் அவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இதற்கு அவரது தந்தையும் உடந்தையாக உள்ளார். நானே எனது கையால் மனைவியை வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன் என்று ஒருவீடியோவில் பதிவு செய்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.