டெல்லி: இந்திய – சீன எல்லை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டுள்ளது.
