வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலகின் சிறந்த கணித மேதைகளில் ஒருவர் சீனிவாச ராமானுஜன். இந்தியாவில் இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினமான டிச. 22, தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க ராமானுஜன் முயற்சி எடுத்தார். ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்டவர்.
ஈரோட்டில் 1887ம் ஆண்டு டிச.,22ல் ஏழை அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாசன்; தாயார் கோமளம்வல்லி. தந்தை துணிக்கடையில் கணக்காளராக இருந்தார். ஏழு வயதில் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று கும்பகோணத்தில் கல்வி பயின்றார்.
சாதித்த பள்ளி பருவம் : பள்ளி பருவத்திலேயே பல கணித இணைப்பாடுகளை (பார்முலா) மனப்பாடம் செய்து ஒப்புவித்தலில் திறன் பெற்று, கலைமகளின் பூரண அருள் பெற்றவராக ஆனார். 1915ல் ராமானுஜம் உருவாக்கிய கோட்பாடு, 1987ல் கணித அறிஞர்களால் தொடர வழி வகை செய்தது. ‘ஜீரோவிற்கும் மதிப்புண்டு’ என கூறியவர். 1962ம் ஆண்டு மத்திய அரசு, ராமானுஜத்தின் 75 வது பிறந்த நாளில் அஞ்சல் தலையை வெளியிட ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததும், ‘ஜீரோ’விற்கு மதிப்பு அறித்தவரின் பெருமையை சொல்லியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement