உயிரிழந்த வர்த்தகர் இரகசியமாக சந்திக்க சென்ற நபர் யார்..! இருவருக்காக சிற்றுண்டி கொள்வனவு



தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது சாரதி எவரும் உடன் இருக்கவில்லை என்பதும், குறித்த பயணத்திற்காக சாப்டர் காரை அவரே செலுத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் மிக தனிப்பட்ட பயணமாக அவர் அப்பயணத்தை முன்னெடுத்திருப்பதும் அப்படி அவர் இரகசியமாக சந்திக்க சென்ற நபர் அல்லது நபர்கள் யார் என்பது தொடர்பில் வெளிப்படுத்தவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை சம்பவத்தன்று தினேஷ் சாப்டர், மலலசேகர மாவத்தையிலுள்ள உணவகத்தில் இருவருக்கு தேவையான சிற்றுண்டிகளை கொள்வனவு செய்துள்ள போதும், சிற்றுண்டிகள் வைத்துக் கொடுக்கப்பட்ட பை மாத்திரமே சாப்டரின் காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டிகள் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் இருவரால் உட்கொள்ளப்பட்டிருக்கின்றமை தொடர்பில் ஊகிக்க முடியுமான சான்றுகள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளன.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.