உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் மெஸ்ஸியை கட்டிபிடித்து நெகிழ்ந்தது அவர் தாய் இல்லை! யார் அவர்? வீடியோ



கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிறகு மெஸ்ஸியும், அவர் தாயாரும் மைதானத்தில் கட்டிபிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என வீடியோ வெளியான நிலையில் அது அவரின் தாயார் இல்லை என தெரியவந்துள்ளது.

FIFA 2022 உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி பரபரப்பாக நடைபெற்ற நிலையில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றிக்கு பின்னர் மெஸ்ஸி மைதானத்தில் அங்குமிங்கும் மகிழ்ச்சியில் நடந்தபடி இருந்தார்.

மெஸ்ஸியை கட்டிபிடித்து நெகிழ்ந்த பெண்

அப்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ஒரு பெண் மெஸ்ஸி முதுகை தட்டி அவரை திருப்பினார்.
அவரை பார்த்து மெஸ்ஸி இன்ப அதிர்ச்சியடைந்த நிலையில் இருவரும் கட்டிபிடித்து கொண்டு மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினார்கள்.

சமையல் கலைஞர்

மெஸ்ஸியை கட்டிபிடித்த பெண் அவரின் தாயாரான சிலியா மரியா என பல முன்னணி ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் அது மெஸ்ஸியின் தாய் கிடையாது என தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி அவரின் பெயர் அன்டோனியா ஃபரியாஸ் ஆகும்.
சமையல் கலைஞரான இவர் அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உணவு சமைத்து கொடுப்பவர் ஆவார்.
அணியினர் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அவர்களுடன் உடன் செல்வார் என தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.