மதுரை: இயற்க்கை பேரிடர் வருவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் பேரிடர் சேதங்களை அரசே ஏற்க வேண்டும் என உயநீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. கஜா புயலில் சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த செந்தில்குமார், கமுமுகடாவை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இருவரின் படகுகளும் 2018-ம் ஆண்டு கஜா புயலில் சேதமடைந்த நிலையில் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இழப்பீடு என்பது சட்டபூர்வமானது, அதனை நன்கொடையாக கருதக்கூடாது. எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வர வாய்ப்புள்ளதாக கருதப்படும் சூழலில் பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மனுதாரருக்கு முறையாக ரூ.1.38 லட்சம் மற்றும் ரூ.1.33 லட்சம் இழப்பீடு தொகையை 8 வாரத்தில் தமிழக அரசு வழங்க நீதிபதி ஆணையிட்டார்.