கிறிஸ்துமஸில் மகாராணியின் நீண்டகால மரபை உடைக்கும் மன்னர் சார்லஸ்!

பிரித்தானிய மன்னர் சார்லஸ் பாக்சிங் டேவுக்கு பிறகு சாண்ட்ரிங்ஹாமில் இருந்து பிர்காலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராணி எலிசபெத்தின் வழக்கம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் திகதியான சேரும் நாள் வரை, சாண்ட்ரிங்ஹாமில் தங்கி இருப்பதையே மறைந்த ராணி எலிசபெத் வழக்கமாக கொண்டிருந்தார்.

இது அவரது மரபாகவே இருந்து வந்தது.

ஆனால், தாயின் இந்த மரபின் உடைக்கும் வகையில் மன்னர் சார்லஸ், பாக்சிங் டே முடிந்த பின்னர் உடனடியாக ஸ்கொட்லாந்தில் உள்ள பிர்காலுக்கு சென்றுவிடுவார் என்றும், பல வாரங்களுக்கு எல்லைக்கு வடக்கே இருப்பார் என்றும் தெரிய வந்துள்ளது.

கிறிஸ்துமஸில் மகாராணியின் நீண்டகால மரபை உடைக்கும் மன்னர் சார்லஸ்! | King Charles Will Break Queen Tradition Christmas

எனினும் அவர் ராணியைப் போலவே சிவப்பு பெட்டிகளின் மூலம் பரிசுப்பொருட்கள் தொடர்பில் பணியாற்றுவார். மேலும் கிறிஸ்துமஸ் தினத்தைத் தவிர ஒவ்வொரு நாளும் மாநில விவகாரங்களைக் கையாள்வார்.

வழக்கமான நடைமுறைகளை கடைபிடிப்பது அவரது நோக்கமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

கிறிஸ்துமஸில் மகாராணியின் நீண்டகால மரபை உடைக்கும் மன்னர் சார்லஸ்! | King Charles Will Break Queen Tradition Christmas

அரச குடும்பம் ஒன்றுகூடும் எதிர்பார்ப்பு

எவ்வாறாயினும், இன்னும் பல ஆண்டுகளுக்கு சாண்ட்ரிங்ஹாமில் நடைபெறும் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் விழாக்களில் ஒன்றாக இந்த ஆண்டு அமையும் என்று கூறப்படுகிறது.

தேவாலயத்திற்கு முதல் முறையாக இளவரசர் வில்லியம், கேட் இருவரும் தங்கள் மூன்று பிள்ளைகளையும் அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கமீலாவின் மகள் லாரா லோப்ஸ் தனது பிள்ளைகளுடன் அரச குடும்பத்தில் இணைவார் என்றும் நம்பப்படுகிறது.   

கிறிஸ்துமஸில் மகாராணியின் நீண்டகால மரபை உடைக்கும் மன்னர் சார்லஸ்! | King Charles Will Break Queen Tradition Christmas

கிறிஸ்துமஸில் மகாராணியின் நீண்டகால மரபை உடைக்கும் மன்னர் சார்லஸ்! | King Charles Will Break Queen Tradition Christmas

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.