கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் முறையில் ஒரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், சிறப்பு தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் (டிசம்பர் 25) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.