கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது 58 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அனர்த்த வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தில் 72,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 40,998 நோயாளிகளர்கள் அதிகமாக பதிவாகியுயள்ளனர்.
அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.