சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை (டிசம்பர் 31, ஜனவரி 1, 2-ம் தேதிகள் தவிர்த்து) நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதில், 27ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்