பஸ்தி, உத்தர பிரதேசத்தில், தடுப்புச்சுவர் இன்றி அருகருகே கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தர பிரதேசத்தில், பஸ்தி மாவட்டத்தில் உள்ள கவுரா துண்தா கிராமத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில், அருகருகே இரு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இரண்டுக்கும் நடுவே சுவரோ, தடுப்போ இல்லை. அதோடு, இந்த கழிப்பறைக்கு ஒரு கதவு மட்டுமே உள்ளது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கழிப்பறையின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பிரியங்கா நிரஞ்சன், ”சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு காரணமான ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement