தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பாக 4 தொலைபேசி இலக்கங்கள் குறித்து பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புக்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொலிசாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொரளை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன ககுலவல, சம்பந்தப்பட்ட நான்கு தொலைபேசி இலக்கங்களுக்கு பெறப்பட்ட அழைப்புகள் தொடர்பான விரிவான அறிக்கையை பொலிஸாருக்கு வழங்குமாறு குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் அவரது மனைவி உட்பட பல தரப்பினரிடம் வாக்குமூலம் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.