வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் ஹெச் வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படக்குழுவினரின் ஏற்கனவே வெளியிட்ட இந்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் அண்மையில் துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் மதுரையில் விஜய் அஜித் ரசிகர்கள் இடையே போஸ்டர் மோதல் அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை கூறும் வகையில் விஜய், அஜித் ரசிகர்கள் போஸ்டர் மூலமாக ஒரு யுத்தமே நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை விஜய் ரசிகர்கள் “எங்களுக்கு எதிரியா இருக்கணும்னு நினைக்காத ஏன்னா எங்களுக்கு துணிவு ஜாஸ்தி…மீறி நினைச்சா உன் வாரிசியே அழிச்சிடுவோம். என்று போஸ்டர் ஒட்டி இருந்தனர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் “தம்பிகளா உங்க அண்ணன் படம் ஓட அவர் உங்கள சந்திக்கணும்”- “எங்க அண்ணன் துணிவுக்கூட மோதணும்னா நீ கொஞ்சம் சிந்திக்கனும்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரையின் முக்கிய நகர் பகுதிகளான கோரிப்பாளையம், சிம்மக்கல், ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்களாக ஒட்டி அஜித் ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த போஸ்டர்களின் வீடியோ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.