நாளை ஐபிஎல் மினி ஏலம் : 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு ? – விவரம்

கொச்சி,

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் நாளை கொச்சியில் நடைபெறுகிறது. மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் ஐபிஎல்லில் பங்கு பெற பதிவு செய்துள்ளனர்.

அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகபட்சமாக 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 27 வீரர்களும், இலங்கையில் இருந்து 23 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து 14 வீரர்களும், அயர்லாந்தில் இருந்து 8 வீரர்களும், வங்கதேசம், ஜிம்பாப்வே, யுஏயில் இருந்து தலா 6 வீரர்களும், நமிபியாவில் இருந்து 5 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து 2 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரரகளை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு ? என்பது குறித்த விவரம் :

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20.45 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.42.25 கோடி

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.32.2 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ.23.35 கோடி

மும்பை இந்தியன்ஸ் – ரூ .20.55 கோடி

டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ .19.45 கோடி

குஜராத் டைட்டன்ஸ் – ரூ.19.25 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ .13.2 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ .8.75 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ .7.05 கோடி


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.