புதுடெல்லி: கடற்படையின் மேற்கு தலைமையகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் ரஷ்ய கீலோ வகை நீர்மூழ்கி கப்பல்களை மறுசீரமைப்பதற்கு உதிரிபாகங்கள் வாங்கியபோது, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளின் ெசல்வாக்கை பயன்படுத்தி பண பலன்களை பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் இரண்டு மாதங்களில் அதாவது கடந்த ஆண்டு நவம்பரில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கடற்படை அதிகாரிகளான ஓய்வு பெற்ற கமாண்டர் எஸ்ஜே சிங், பணியில் இருக்கும் அதிகாரிகள் அஜித் பாண்டே, அபிஷேக் குமார் ஷர் மற்றும் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் மீது வழக்கு தொடர்வதற்கு அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர் 4 கடற்படை அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 2ம் தேதி ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் அதற்கு அடுத்த நாள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.2.4கோடி ஊழல் பணம் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் ரன்தீப் சிங் மற்றும் எஸ்ஜே சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எனவே உதிரிபாக ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.