கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்.எல்.சி., நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது. இந்த அனல் மின் நிலையம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த அனல்மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கொள்கலன் பிரிவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்த சக ஊழியர்கள் தீக்காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு நெய்வேலி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்கள் நான்கு பெரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த என்.எல்.சி., நிறுவன உயரதிகாரிகள் திடீரென தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.