பீ ஹேப்பி! 2022-ல் வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்பட்ட 5 தரமான சிறப்பம்சங்கள்

வாட்ஸ்அப் அனுபவத்தை மேலும் மேம்படுத்தப் பல புதிய தனியுரிமை அம்சங்கள், குரூப்பிற்கான அம்சங்கள் மற்றும் அழைப்பு மற்றும் செய்தி அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான அம்சங்களை 2022 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் சில சிறந்தவைகள் இங்கே உள்ளன.  
 
வாட்ஸ்அப்பை கோடிக் கணக்கான மக்கள் தினமும் உபையோகிக்கிண்றனர். மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஷுக்கர்பர்க், கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் போது ஒரு வினாடிக்கு 25 மில்லியன் மெசெஜ்களை மக்கள் பகிர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால் வாட்ஸ்அப் அனுபவத்தை மேலும் மேம்படுத்தப் பல புதிய தனியுரிமை அம்சங்கள், குரூப்பிற்கான அம்சங்கள் மற்றும் அழைப்பு மற்றும் செய்தி அனுபவத்தைப் பரிமாறிக்கொள்வதற்கான அம்சங்களை இந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 5 சிறப்பம்சங்கள் முன்பைவிட கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.

image

ஆன்லைன் நிலையை மறைப்பு:

இந்த  சிறப்பம்சத்தின் மூலம்  நமது வாட்ஸ்அப்பின் ஆன்லைன் நிலையை அனைவரிடமிருந்தும் மறைத்துக் கொள்ளலாம். இதை ஆன் செய்தால் நமது தொடர்புகளிடமிருந்து நமது ஆன்லைன் நிலையை மறைத்து விடலாம். முன்பெல்லாம் நாம் ஏதேனும் காரணமாக மெசெஜ்களை பார்க்காமல் இருப்போம், ஆனால் நாம் அவர்களை அவாய்ட் செய்வதாக நினைத்து இருவருக்கிடையே சங்கடம் ஏற்படும். ஆனால் இப்பொழுது அந்த கவலை தேவையில்லை.

மெசெஜ் ரிஎக்ஸன்:

சில நேரங்களில் நமக்குப் பதில் மெசெஜ் செய்ய சோம்பலாக இருக்கும், ஆனால் பதில் செய்யாமல் விட்டால் மதிப்பாக இருக்காது. அதற்கு உதவும் வகையில் நமக்கு வாட்ஸ்அப்பின் சிறப்பம்சமாக மெசெஜ் ரிஎக்ஸன் வந்துள்ளது. இந்த சிறப்பம்சமுலமக நமக்குப் பிடித்த எமொஜியில் பதில் சொல்லலாம், இது எளிதாகவும் இருக்கும், வேகமாகவும் இருக்கும். முன்பு வாட்ஸ்அப் எமொஜி அனுப்புவதை அளவுபடுத்தியிருந்தது, ஆனால் இப்பொழுது நாம் விரும்பும் அளவிற்கு எமொஜி அனுப்பிக்கலாம். இந்த வருடத்தில் இது வாட்ஸ்அபின் ஒரு சிறந்த சிறப்பம்சமாகும்.

image

நமக்கு நாமே மெசெஜ் செய்யலாம்:

இதன் மூலம் நமக்கு நாமே தேவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இன்று வரை நாம் முக்கிய தகவல்களை சேகரிக்க, ஏதேனும் தனி குறிப்புகளில் தான் சேகரிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அது எதுவும் தேவை இல்லை. நமக்கு நாமே அனுப்பி வைத்துக் கொள்ளலாம்.

அவதார்ஸ்:

வாட்ஸ்அப்பில் ஸிடிக்கர் வந்தபொழுது நாம் அனுப்பும் மெசெஜ்கள் மிகச் சிரிப்பாகவும், களகளப்பாகவும் இருந்தது, அதே போல் இப்பொழுது வந்துள்ள அவதாரும். இதன் மூலம் நம்மைப் போல் ஒரு உருவத்தை உருவாக்கி பதில் அனுப்பலாம்.

அமைதியாக குரூப்பிலிருந்து வெளியேறலாம்:

இன்றுவரை நாம் ஏதெனும் குரூப்பிலிருந்து வெளியே வந்தால் அது மற்ற குரூப்பு நபர்களுக்குத் தெரியவரும். ஆனால் இப்பொழுது இந்த சிறப்பம்சம் மூலம் நாம் எந்த குரூப்பை விட்டு வெளியேறினாலும் யாருக்கும் தெரியாது. உங்களுக்கு ஏதேனும் குரூப்பில் இருக்க விருப்பமில்லை என்றால் நீங்கள் வெளியேறிவிடலாம் அதை யாருக்கும் தெரியாமல் வாட்ஸ்அப் உங்களைப் பாதுகாக்கும்.

-ஷர்நிதா           Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.