புதுச்சேரி: புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ. 7 லட்சமும், மற்ற 4 சிறுமிகளுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
