கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலை கடைகளில் கரும்பை இலவசமாக வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பனிக்கரும்பு பயிரிட்டுள்ளனர். பொங்கல் தொகுப்பிற்காக கருப்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் அதிகப்பரப்பில் பயிரிட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் அது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறினர்.
கடந்த ஆண்டை போலவே முழுநீள கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாகும். மேலும் அரசு நிர்ணயம் செய்த விலையைவிட குறைவான தொகைக்கு கொள்முதல் செய்தால் பெறும் நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.