மாணவனை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கூடுவேலி சாவடியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிதம்பரத்தை சேர்ந்த கண்ணகி (56). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவனை சரியான முறையில் படிக்காத காரணத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியர் தாக்குவதை ஒருவர் மறைந்து நின்று வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்தார்.  இதையடுத்து, ஆசிரியர் கண்ணகியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.