மேதினிநகர், ஜார்க்கண்டில் மாந்திரீகம் செய்து வந்த தந்தையை கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனையும், மருமகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்டில், பாலமு மாவட்டத்தில் உள்ள மஜ்ஹியன் கிராமத்தில் வசித்த 60 வயது முதியவர் மாந்திரீகம் செய்து வந்தார்.
இவர் தன் மகன், மருமகள், பேரனுடன் வசித்த நிலையில், இரு வாரங்களுக்கு முன், குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது நடந்த சில நாட்களுக்குப் பின் முதியவரின் பேரன் உயிரிழந்துள்ளான். இதற்கு தன் தந்தை தான் காரணம் என சந்தேகித்த மகன், இரு நாட்களுக்கு முன், தன் மனைவியுடன் சேர்ந்து, அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முதியவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரின் மகனும், மருமகளும் தப்பியோடிய நிலையில், அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தப்பி யோடிய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement