பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறைகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில், பஸ், ட்ரெயின் டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை துவங்கி இருக்கின்றனர்.
முந்தைய கட்டணங்களை விட பண்டிகை காலமென்பதால் இரண்டு மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி கட்டண வசூல் நிலவரம் பின்வருமாறு :-
சென்னை to நெல்லை – ரூ.2300 (சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.1000)
சென்னை to நாகர்கோயில் – ரூ. 3600 ( ஏசி படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து)
சென்னை to மதுரை – ரூ.3000 (ஏசி படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து)