மாளவிகா மோகனனை தாக்கினாரா நயன்தாரா… வைரல் வீடியோ முழு விவரம்!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும், தனிப்பட்ட விமர்சனத்தையும் சந்தித்தவர் அவர். இருந்தாலும் மனம் தளராத அவர் தொடர் உழைப்பின் காரணமாக தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்தாரா.

அந்தவகையில், அஷ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ், வினய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நயன்தாரா. அப்போது அவரை பிரபல தொகுப்பாளின் டிடி என்கிற திவ்யதர்ஷினி பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில், நயன்தாரா படம் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்வு குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார் என கூறப்படுகிறது. 

இந்த பேட்டியின் வீடியோக்கள் சிறு சிறு தொகுப்புகளாக இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. நயன்தாரா தனது பேய் பயம் குறித்த பகிர்ந்துகொண்ட பகுதி வைரலானது. தொடர்ந்து, மாளவிகா மோகனன் குறித்து மறைமுகமாக நயன்தாரா பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. .

அதாவது, சில நாள்களுக்கு முன் நடிகை மாளவிகா மோகனன், ‘ஒரு சூப்பர்ஸ்டார் நடிகை மருத்துவமனையில் பரபரப்பான சுழலில் நோயாளியாக இருக்கும்போதும், எந்தவித அயர்ச்சியும் இல்லாமல் முழு மேக்கப் உடன் இருக்கிறார். கமர்ஷியல் படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா.’ என கூறியிருந்தார். இதையடுத்து, பலரும் இது நயன்தாராவை குறிப்பிட்டுதான் மாளவிகா கூறுகிறார் என்று இணையத்தில் தெரிவித்து வந்தனர். 

தற்போது, டிடிக்கு அளித்த பேட்டியில்,”ஒரு நடிகை என் பெயரை குறிப்பிடாமல், எனது படத்தின் காட்சியை பார்த்து கருத்து கூறியிருந்தார். அதாவது மருத்துவமனையில் இப்படி டிப்டாப்பாக இருந்தார் என கூறியிருந்தார். நான் டிப்டாப்பாக இருக்க வேண்டும் என கூறவில்லை. ஆனால், மருத்துவமனையில் தலைவிரிக்கோலமாகதான் இருக்க வேண்டும் என்று இல்லையே. கமர்ஷியலாக படம் எடுப்பதால் இயக்குநரின் தேவையை பொருத்த நடிக்க முடியும். யதார்த்த சினிமாக்களில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி நடிப்பேன்” என கூறியிருந்தார். 

இதை தொடர்ந்து, மாளவிகா மோகனின் பேட்டியையும், நயன்தாரா பேட்டியையும் ஒருங்கிணைத்து ட்விட்டரில் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு பேட்டிகளிலும் முன், பின் நிகழ்வுகள் விவரிக்கப்படவில்லை. எனவே, மாளவிகா மோகனன் நயன்தாராவை குறை சொல்கிறார் என்றும், நயன்தாரா மாளவிகாவுக்கு பதிலடி கொடுக்கிறார் என்ற கருத்து தேவையற்றது என சில நெட்டிசன்கள் பதிவேற்றி வருகின்றனர். இருப்பினும், அந்த வீடியோவை பகிர்ந்து தங்களது ஆதாரவை இரு நடிகைகளுக்கும் நெட்டிசன்கள் வாரி வழங்கி வருகின்றனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.