நிலக்கரிக்கான தட்டுப்பாடு காரணமாக மின் துண்டிக்கப்படும் நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று நிலக்கரி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அடுத்த மாதம் ஆறாம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக நிலக்கரி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டிற்கு அவசியமான நிலக்கரி கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,இதனால் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போவதன் காரணமாக, டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியால மின் வெட்டு மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறி;பிடத்தக்கது..