மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… நாம் பயப்பட வேண்டிய அவசியம் இருக்கிறதா?

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற பேச்சு தான் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஒமிக்ரானின் புதிய வைரஸ்கள் வெவ்வேறு உருவங்களில் வந்து அச்சுறுத்தி வருவதாக தகவல்கள் அடிபடுகின்றன. இதுதொடர்பாக கோவிட் தகவல் நிபுணர் விஜயானந்த் சில தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோவிட் தகவல் நிபுணர்இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் படு வேகமாக பரவிய போது, புள்ளி விவரங்கள் மூலம் பாதிப்புகளின் நிலை குறித்து விஜயானந்த் புட்டு புட்டு வைத்தார். இது சாமானியர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததுடன் அடுத்தகட்டமாக எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் அளித்தது. இந்நிலையில் கொரோனாவின் புதிய அலையின் கள நிலவரம் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்அதில், சீனாவில் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது இந்தியாவை பாதிக்குமா? என்றால் இல்லை. சீனாவில் ஜீரோ கோவிட் அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் நிலைமை கட்டுப்படுத்தும் அளவிற்கு தான் உள்ளது. சீனாவில் பரவும் வைரஸ்களான B.A.2.75, B.A.5, B.Q.1, XBB ஆகியவை ஒமிக்ரான் பிரிவு உருமாறிய வைரஸ்களே ஆகும்.
XBB வைரஸ்: இந்தியாவை அச்சுறுத்துமா… பாதிப்புகள் எப்படி இருக்கும்?
விஜயானந்த் ட்வீட்
கவலைப்பட வேண்டாம்இவை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது தான் சீனாவில் பரவ தொடங்கியுள்ளது. எனவே நாம் இங்கு கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை. தற்போதைய சூழலில் தினசரி 154 பேர் என்ற வகையில் குறைவான விகிதத்தில் தான் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இது கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து ஒப்பிடுகையில் மிக மிக குறைவான நிலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய வைரஸ் அல்லஎனவே சீனாவின் நிலையை கண்டு இந்தியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். குறிப்பாக கோவிட் BF.7 என்ற வகை வைரஸ் பற்றிய செய்திகள் அதிக அளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. BA.5.2.1.7 என்ற வைரஸின் சுருக்கமான வடிவமே BF.7 ஆகும். இது ஒமிக்ரான் BA.5 வகையில் உருமாறிய வைரஸ். எனவே முற்றிலும் புதிய வைரஸ் என்று நினைத்துவிட வேண்டாம்.
இந்தியா நிலவரம்கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏற்கனவே இந்த வைரஸ் பரவி இருக்கிறது. எனவே சர்வதேச நிலவரத்தை பார்த்து இந்தியர்கள் அச்சப்பட வேண்டாம். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிவேகமாக பரவும் புதிய வகை கொரோனா: மோடி நடத்தும் ஆலோசனை!
கோவிட் நிலவரம்
நம்பிக்கையூட்டும் தகவல்தமிழகத்தை பொறுத்தவரை 6 பேருக்கும், சென்னையில் 2 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய குறைவான பாதிப்பையே ஏற்படுத்தக் கூடும். இந்த ட்ரெண்ட் ஒட்டுமொத்த பாதிப்பின் வரலாற்றில் மிகக் குறைவான ஒன்று. இதை மனதில் வைத்து தைரியமாக இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.