வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப். 7 ரக கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் பரவினாலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மன்சூக் மாண்டவியா, மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
![]() |
இதையடுத்து பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, தொற்றை தடுப்பதற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் தயாராக வைத்திருக்க வண்டும். சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிக்க வேண்டும். கொரோனா தடுப்பு பரிசோதனை முறையை அதிகரிக்க வேண்டும்.
![]() |
கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பு, அதன் விலை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். முன்கள பணியாளர்கள் முன்பு அயராது பணியாற்றியது போல் இம்முறையும் பணியாற்ற வேண்டும். முக கவசம் அணிவதை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். இவ்வாறு மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement