மெக்சிகோ சிட்டி, ‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனம், அதன் ‘அப்பாச்சி ஆர்.ஆர்., – 310’ மற்றும் ‘ஆர்.டி.ஆர்.200’ பைக்குகளை வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடந்த ‘எக்ஸ்போ மோட்டோ’ கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு பைக்குகளும் அந்நாட்டு பைக் பிரியர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையில், டி.வி.எஸ்., நிறுவனம் காய் நகர்த்தியுள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் பிரீமியம் பிரிவு வணிகத் தலைவர் விமல் சும்பிளி கூறியதாவது:
ரேஸ் டிராக்கிற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த இரு பைக்குகளும், அறிமுகம் ஆனதில் இருந்தே, பைக் பிரியர்களின் மிக விருப்பமானபைக்குகளாக இருக்கின்றன. எக்ஸ்போ மோட்டோ போன்ற தளங்களின் வாயிலாக எங்கள் பைக்குகளின் செயல்திறனைக் கொண்டு, மெக்சிகோ பைக் பிரியர்களை கவர்ந்து இழுப்போம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement