புதுச்சேரி: பொங்கல் பண்டிகைக்கு 500 ரூபாய் மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதரர்கள்ளுக்கும் இலவச தொகுப்புகளை அளித்து வழங்கப்பட்டுவருகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் புதுச்சேரியில் 500 ரூபாய் மதிப்புள்ள 10 பொருட்கள் இலவசமாக வழங்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. குறிப்பாக கூறப்பட வேண்டும் என்றல் பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி. திராட்சை, ஏலக்காய், உள்ளிட்ட இந்த 10 பொருட்கள் இருக்கக்கூடிய 500 ரூபாய் மதிப்புள்ள இந்த தொகுப்பை வழங்குவதற்காக புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த இலவச தோகுப்புகளை பொங்கல் பண்டிகை நெருக்கத்தில், அந்தந்த ரேஷன் கடைகள் முலம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது, குறிப்பாக இந்த இலவச தொகுப்பானது புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன் செய்துவருகிறார். இருந்த போதிலும் ஆண்டு தோறும் இந்த இலவச தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதுச்சேரியில் பெருபாலான ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருந்தது. எனவே இந்த பொருட்களை எப்படி மாற்று வழியில் வழங்கலாமா என்பது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆலோசித்து வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி 500 ரூபாய் மதிப்புள்ள இந்த தொகுப்பு வழங்கியுள்ளது, புதுச்சேரி மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை, மற்றும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.