வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :புதுடில்லி திஹார் சிறையில் லஞ்சம் வாங்கியதாக புகாருக்குள்ளான மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப் கோயல் அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அப்போது, தன் பாதுகாப்புக்காகவும், சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிப்பதற்காகவும், சிறை ஐ.ஜி.,யாக இருந்த மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப் கோயலுக்கு, 12 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.
![]() |
இதையடுத்து சந்தீப் கோயல்,திஹார் சிறையிலிருந்து புதுடில்லி போலீஸ் தலைமையகத்துக்கு கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, சந்தீப் கோயலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement