வீட்டு வாடகைக்கு பதில் படுக்கைக்கு வரச் சொன்ன கவுன்சிலர்: முகத்தில் நீரை ஊற்றிய நடிகை

வீட்டு உரிமையாளர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என தேஜஸ்வினி பண்டிட் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தேஜஸ்வினிமராத்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் தேஜஸ்வினி பண்டிட். தன் அசத்தலான நடிப்புக்காக ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தேஜஸ்வினி பண்டிட் தெரிவித்த விஷயம் பல பெண்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
வாடகை வீடுபேட்டியில் தேஜஸ்வினி கூறியதாவது, 2009-10ம் ஆண்டு சமயத்தில் நடந்தது. அப்பொழுது என்னுடைய இரண்டு படங்கள் தான் ரிலீஸாகியிருந்தன. நான் புனேவில் இருக்கும் சின்ஹாகாத் சாலையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தேன். அந்த அபார்ட்மென்ட் ஒரு கவுன்சிலருக்கு சொந்தமானது. வாடகை கொடுக்க அவரின் அலுவலகத்திற்கு சென்றேன். அவரோ படுக்கைக்கு அழைத்து ஆஃபர் கொடுத்தார். அவர் மேஜையில் ஒரு கிளாஸில் தண்ணீர் இருந்தது. அதை எடுத்து அவரின் முகத்தில் ஊற்றிவிட்டு கிளம்பிச் சென்றேன் என்றார்.
சினிமாதேஜஸ்வினி மேலும் கூறியதாவது, நான் இது போன்ற விஷயங்களை செய்ய சினிமா துறைக்கு வரவில்லை. அப்படி செய்தால் நான் ஏன் வாடகை வீட்டில் தங்கப் போகிறேன். பங்களா, கார்கள் என சொகுசாக வாழ மாட்டேனா?. இரண்டு விஷயங்களை வைத்து அந்த நபர் என்னை அப்படி நினைத்திருக்கிறார். ஒன்று என் தொழில். இரண்டு என் நிதி நிலைமை அப்பொழுது சரியில்லை. அந்த அனுபவம் மூலம் பாடம் கற்றுக்கொண்டேன் என்றார்.
படுக்கைவாடகைக்கு பதில் படுக்கைக்கு வா என்று அழைத்த அந்த கவுன்சிலர் யார் என்று தேஜஸ்வினி தெரிவிக்க வேண்டும். இது போன்ற ஆட்களின் பெயரை தெரிவித்தால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். ஒரு பெண் தனியாக தங்கியிருந்தால் இப்படியா பேசுவது என்று ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த கவுன்சிலரின் பெயரை தேஜஸ்வினி இதுவரை தெரிவிக்கவில்லை.
கெரியர்கெரியரை பொறுத்தவரை அதங் வெப்தொடரில் நடித்திருக்கிறார் தேஜஸ்வினி. அந்த தொடரில் சிறப்பாக நடித்து ரசிகர்களை தன்னை பற்றி பேச வைத்திருக்கிறார். 1930களில் நடப்பது போன்ற கதையில் நடித்துள்ளார். பல டுவ்ஸ்டுகளுடன் வந்திருக்கும் அதங் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நடிகைகள்பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் அதிகம் இருக்கிறது என்று பல பிரபல நடிகைகளே தெரிவித்துள்ளனர். அதில் சிலரோ, தங்களை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை தெரிவித்தனர். இந்நிலையில் தேஜஸ்வினிக்கு வேறு மாதிரி தொல்லை நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.