1000 மில்லியன் டொலரை சேமிப்பாக பெற்ற இலங்கை


கடந்த வருடத்தோடு ஒப்பிடபடுமிடத்து இறக்குமதி செலவினம் 6.5 வீதத்தால் குறைந்துள்ளது என்று ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய
தெரிவித்தார்.

இதன்மூலம் ஆயிரம் மில்லியன் டொலர் சேமிக்கப்பட்டுள்ளது.இந்த சேமிக்கப்படட் வெளிநாட்டு நிதி வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு
பயன்படுத்தப்படுகிறது.

1000 மில்லியன் டொலரை சேமிப்பாக பெற்ற இலங்கை | Sri Lanka Economic Crisis 2022 1000M Dollars

மேலும் பத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை அண்மையில் அரசாங்கம் நீக்கியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

1000 மில்லியன் டொலரை சேமிப்பாக பெற்ற இலங்கை | Sri Lanka Economic Crisis 2022 1000M Dollars

இதேவேளை, தேசிய நுகர்வு விலைச்சுட்டெனுக்கு அமைவாக கடந்த ஒக்டோபர் மாதத்துடன்
ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.6 வீதத்தால்
வீழ்ச்சியடைந்திருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த
ஒக்டோபர் மாதத்தில் 70.6 வீதமாக காணப்பட்ட பண வீக்கம் நவம்பர் மாதத்தில் 65 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.