வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மிர்புர்: இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்புரில் துவங்கியது. ரோகித் சர்மா கை பெருவிரல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், முதல் டெஸ்டில் பொறுப்பேற்ற லோகேஷ் ராகுல் மீண்டும் கேப்டனாக களமிறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஹசன், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்திய அணி விவரம்
கேஎல் ராகுல்(கேப்டன்), சுப்மன் கில், சடேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பன்ட்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஜெயதேவ் உனாத்கட், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement