கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிகாண் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் 24 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நடப்புச் சாம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
LPL தொடரில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க தலைமையிலான கண்டி அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணியின் இன்னிங்ஸில் இரு முறை மழை குறுக்கிட்டதால் அந்த அணி 11 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டியை தொடர முடியாமல் போனது.
இதனால் டக்வர்த் லுவிஸ் முறையில் போட்டி முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் 24 ஓட்டங்களால் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.