விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகின்றார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்கப்படாத நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றது.
Varisu: வாரிசு இசை வெளியீடு..புலி பாயுமா ?பதுங்குமா ?..தளபதியை சீண்டிய பிரபலம்..!
அதாவது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கின்றது. இந்த தகவல் வந்ததிலிருந்து ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீ தற்போது நான்காவது முறையாக விஜய்யை இயக்கவுள்ளார்.
லவ் டுடே வெற்றி – ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ அப்படத்தை முடித்துவிட்டு தளபதியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அட்லீ மிகப்பெரிய தொகையில் சம்பளம் வாங்கவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகின்றது.
இது ஒருபக்கம் இருக்க அட்லீ தளபதி 68 திரைப்படத்தில் ஷாருக்கானை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம். இதை கேட்ட தயாரிப்பு நிறுவனம், ஷாருக்கான் மட்டும் தளபதி 68 திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சில காட்சிகள் நடித்தால் செமையாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மேலும் கண்டிப்பாக அட்லீ ஷாருக்கானை தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க வைப்பார் என்றும் நம்பியுள்ளனர் சன் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.